உள்ளுறுப்புகள் தானம் தாராளம்... ஆனால், வெளி உறுப்புகளை அளிக்க தயக்கம்

தேசியளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்திலுள்ளது.

உடல் உறுப்புகள் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், மூளைச்சாவு அடைந்த பின் உறுப்பு தானம் செய்யும் உடலுக்கு, அரசு மரியாதை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் கடந்த 2025ல், மூளைச்சாவு அடைந்தவர்களில், 266 பேர் உடல் உறுப்புகளை தானம் அளித்துள்ளனர்.

சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றை தானமளிக்க பலர் முன்வந்தாலும், வெளி உறுப்புகளை அளிக்க மக்களிடையே தயக்கம் இருக்கிறது.

கைகள் தானமாக பெறப்பட்டாலும், அந்த உடலுக்கு செயற்கை கைகள் பொருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இறந்த உடல் கைகள் இல்லாமல் இருக்கும் என்ற தயக்கம் வேண்டியதில்லை. தானமாக பெறப்பட்ட கைகள், மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும்.

ஆனாலும், வெளி உறுப்புகள் தானம் அளிப்பதில், மக்களிடையே உளவியல் ரீதியான சிக்கல் இருப்பதால், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.