சிறுநீர் கழிப்பதை தாமதிப்பதால் உண்டாகும் உடல் இயக்க பாதிப்புகள்
பெண்கள் சிறுநீர் கழிப்பதை தாமதிப்பது இடுப்பை சுற்றியுள்ள பெல்விக் தளத்தை தாங்கியுள்ள தசைகள் தளர்வாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.
இது நாளடைவில் தசை தளர்ச்சி, முடக்கத்தை ஏற்படுத்தும்.
கர்ப்பம் தரிக்கும் காலங்களில் சிறு சிறு உடல் இயக்க சிக்கல்கள் தரும்.
அதிக
நேரம் பஸ்சுக்காக காத்திருத்தல், படிகளில் ஏறி இறங்குதல், நடக்கும்போது
சிறுநீர் பை நிரம்பியிருந்தால் இடுப்பு பகுதியிலிருந்து கீழ் நோக்கிய
அழுத்தத்தை அதிகரிக்கும்.
இரண்டு கால்களின் தசைகளில் இருந்து இதயத்துக்கு திரும்பும் ரத்த ஓட்டத்தில் குறைபாடுகள் உருவாகும்.
உடல் எடை தாங்க உதவியாக இடுப்பை ஒட்டியுள்ள குடேரட்டஸ்
லம்போரம் போன்ற பல முக்கிய தசைகள் இழந்த சமநிலையை ஈடு செய்ய கூடுதலாக வேலை
செய்யும்.
இது நீண்ட எதிர்கால வலிக்கும், நரம்பியல் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.