ராகி சாக்லேட் பணியாரம் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: ராகி மாவு - 1 கப், பால் - 1 கப், நாட்டு சர்க்கரை - அரை கப்.

கொக்கோ பவுடர் - கால் கப், எண்ணெய், பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் நெய் சிறிதளவு.

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், பேக்கிங் பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.

பணியாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி, மூடி வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பி போட்டு மறுபக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

இப்போது, சூடான, சுவையான மற்றும் ஆரோக்கியமான 'ராகி சாக்லேட் பணியாரம்' ரெடி.

சாக்லேட் சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பர்.