ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ராகி அல்வா

தேவையானப் பொருட்கள்: ராகி அல்லது கேழ்வரகு மாவு-1 கப், தண்ணீர்- 2 கப், வெல்லம்- 1, நெய் - 0.25 கப்.

தேங்காய் பால் -1 கப், முந்திரி- 10, ஏலக்காய் பொடி - 0.25 டீஸ்பூன்.

ராகி மாவை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி (ராகி பால்) எடுக்கவும். இல்லாவிட்டால் கேழ்வரகை முதல் நாள் இரவு ஊற வைத்தும் அரைத்தெடுக்கலாம்

கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.

கெட்டியான தேங்காய் பால் மற்றும் ராகி பாலை ஒன்றாக கலந்து அதே கடாயில் சேர்த்து கட்டி தட்டாமல், மிதமான தணலில் கை விடமல் கிளறவும்.

கெட்டியாக திரண்டு வரும் போது வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லத்தை சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்றாக கரைந்தவுடன் வடிகட்டியும் சேர்க்கலாம்.

அவ்வப்போது நெய் சேர்த்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.

பின், அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி அல்வா ரெடி. வறுத்த முந்திரிபருப்புகளை துாவி பரிமாறவும்.