மறப்பது முதுமையின் இயல்பா?
டிமென்ஷியா என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. இது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை மற்றும் தினசரி செயல்பாடுகளின் திறனை பாதிக்கும் பலவித பிரச்னைகளின் நோய் தொகுப்பு.
வயது ஒரு காரணியாக இருந்தாலும், டிமென்ஷியா தவிர்க்க முடியாத பிரச்னை இல்லை.
முதியவர்கள், அவர்களை கவனித்து கொள்பவர்களிடம் பேசும் போது, உரையாடல்களை மறப்பது,கேள்விகளை திரும்ப கேட்பது பாதிப்பில்லாத இயல்பான விஷயமாகவே நினைக்கின்றனர்.
மறதி நோய் என்பது, நினைவாற்றல் இழப்பை தாண்டி, நோயாளி மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தினசரி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது.
ஆரோக்கியமான முதியவர்களை பராமரிப்பதை காட்டிலும், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பவர்கள், மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
எப்போதாவது பெயர்களை மறப்பது அல்லது பொருட்களை தவற விடுவது முதுமையின் ஒரு இயல்பான பகுதியாக இருக்கலாம்.
ஆனால், அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும் தொடர்ச்சியான நினைவாற்றல் பிரச்னைகளை அலட்சியம் செய்வது கூடாது.
மறதி நோய்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடனே சிகிச்சை பெறவேண்டும்.
இதனால் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.