ஹார்ட் அட்டாக் வர காரணங்களும் தீர்வுகளும்!

'ஹார்ட் அட்டாக்' எப்போது ஏற்படும் என யாராலும் கணிக்க முடியாது. அதிகாலையில் பலருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், படபடப்பு, பயம், கோபம் ஆகியவற்றால் வரும்.

படபடப்பு, இடது பக்க மார்பு வலி, தலை சுற்றல் இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் பயப்படாமல் டாக்டரை அணுகி இதய நோய் சிறப்பு பரிசோதனை செய்வது அவசியம். குறிப்பாக 'எக்கோ' பரிசோதனை செய்யலாம்.

இதயநோய் ஏற்படாமல் தவிர்க்க சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அதிக கொழுப்பு, புகைப் பிடிப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம்.

இது பரம்பரை நோய் என்பதற்கான அறிவியல் பூர்வமாக உறுதி செய்யவில்லை.

ஆனால் குடும்பத்தில் தாய் அல்லது தந்தைக்கு இருந்தால், பிள்ளைகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இறைச்சி உணவை தவிர்ப்பது நல்லது.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு அவசியமாகும். பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.