உடல் எடையை குறைக்க ராகி வெஜ் சூப்! ரெசிபி இதோ!
உடல் எடையை குறைக்க விரும்புவோர் ராகி சார்ந்த உணவுகளை சேர்த்து கொள்வது சிறப்பு. 'ராகி சூப்'பை தினமும் பருகி வந்தால், உடல் எடை ஆரோக்கியமாக குறையும். இதன் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: ராகி மாவு -- 1/4 கப், l நெய் -1 டீஸ்பூன், l பெரிய வெங்காயம் - 1, பீன்ஸ் - 1/4 கப், கேரட் - 1/4 கப், ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
பின், வாணலியில் நெய் ஊற்றவும். அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன், பூண்டு, பீன்ஸ், கேரட், ஸ்வீட் கார்ன், உப்பு, மிளகு துாள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் ராகி மாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ராகி சூப் தயார்.
இந்த சூப்பை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மட்டுமின்றி, அனைவருமே பருகலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.