வகை வகையாக ஜவ்வரிசி வடாம் செய்யலாமா!

ஒரு கப் ஜவ்வரிசியை எடுத்து, அதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

ஜவ்வரிசி, சீக்கிரம் கெட்டியாகி விடும் என்பதால், கரண்டியால் எடுத்து விடும் பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் கொதிக்கும் நீர் விட்டுக் கலந்து கொள்ளலாம்.

இந்த ஜவ்வரிசிக் கஞ்சியைப் பல பாகங்களாகப் பிரித்து, பல சுவைகளில் வடாம் போடலாம்.

பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம், சீரகம் சேர்த்து செய்யலாம்

தக்காளிப்பழ விழுது, பெருங்காயம் கலந்து செய்யலாம்

சுத்தம் செய்த வேப்பம்பூ, பெருங்காயம், கருப்பு எள் சேர்த்தும் செய்யலாம்

புதினா அரைத்த விழுதுடன் சேர்த்து செய்யலாம்.

பீட்ரூட் அல்லது கேரட்டை அரைத்துக் கூழ் காய்ச்சும் போது சேர்க்கவும். இந்த வடாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.