பூச்சி பல் பிரச்னைக்கு தீர்வுகள் சில...
சிறுவயதில் பூச்சி பல் பிரச்னை ஏற்படுவது இயல்புதான். ஒவ்வொரு பற்களும் குறிப்பிட்ட ஆண்டுகளில் விழுந்து முளைக்கும்.
7 வயது முதல் பால் பற்கள் விழுந்து புதிய நிரந்தர பற்கள் முளைக்கும்போது இந்த பிரச்னை சரியாகும்.
அதற்குமுன் பற்களில் வலி, வீக்கம் குடைச்சல் என தொந்தரவு ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த தொந்தரவும் இல்லாமல் வேர் சிகிச்சைக்கு தயாராகும் போது, அது நிரந்தர பல் வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது.
'கேப்' பயன்படுத்தினால் பற்கள் சீரற்ற வளர்ச்சியடைந்து கோணலாகவும், தெத்துப்பல் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
பற்களை பாதுகாக்கவும், பூச்சிப்பல் பாதிப்பு பெரிதாகாமல் கட்டுப்படுத்தவும் குழந்தைகளுக்கான டூத்பேஸ்டகள் நிறைய கிடைக்கின்றன.
மருத்துவரின் பரிந்துரையோடு தகுந்த 'டூத்பேஸ்ட்'டை காலை, இரவு என இரு நேரங்களில் பயன்படுத்துங்கள்.
பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு எப்போதும் ஆரோக்கியமான, கால்சியம் சத்துமிக்க உணவுகளை சாப்பிடக்கொடுங்கள்.