சியாட்டிகா... அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன?
நம் உடலின் இடுப்பு பகுதியிலுள்ள பெரிய நரம்பான சியாட்டிக் நரம்பில் ஏற்படும் அழுத்தம், எரிச்சல் ஆகியவற்றால் ஏற்படும் ஒருவித நரம்பு வலி இது.
கீழ் முதுகு வலி, கால் வலி, காலில் கூச்ச உணர்வு, மரத்துப்போதல் பாதிக்கப்பட்ட காலில் தசை பலவீனம், இருமல், தும்மலின் போது வலி ஏற்படுதல் அறிகுறியாகும்.
முதுகெலும்பு இடையிலுள்ள வட்டு (டிஸ்க்) வெளியேறி நரம்பை அழுத்துதல், முதுகெலும்பு சுருக்கம், முதுகு எலும்பில் ஏற்படும் சிறிய வளர்ச்சி, காயம், முதுமை போன்றவை இதன் பாதிப்புகள்.
உடற்பயிற்சி, இயன்முறை சிகிச்சை, நரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டால் ஆபரேஷன் ஆகியவை தேவைப்படும்.
வலி குறைய வேண்டும் என்பதற்காக வெந்நீர் ஊற்றுவது, அதிகச் சூட்டில் ஒத்தடம் கொடுப்பது போன்ற சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது.
வெகுநேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.
அவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் பெறலாம்.