சீசன் ஸ்பெஷல்... மாம்பழ புட்டு ரெசிபி இதோ !

தேவையானப் பொருட்கள்: மாம்பழ விழுது - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 0.5 கப்.

நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.

புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கவும். வெல்லத்தில், நீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, மாம்பழ விழுதை கலக்கவும்.

பாத்திரத்தில், தண்ணீர் கொதித்ததும், அரைத்த மாவு, உப்பு சேர்த்து கிளறவும்.

வெந்தவுடன், மாம்பழக்கலவை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறி, கெட்டியானவுடன், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.

இப்போது, ​​சுவையான 'மாம்பழ புட்டு' ரெடி. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.

அரிசி, வெல்லம் மற்றும் மாம்பழ விழுது கலவையை புட்டுக்குழலிலும் தனியாகவும் வேக வைத்து எடுக்கலாம்.