இன்று தேசிய கண் தான தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வை இன்றி தவிக்கின்றனர்.

கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது.

தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாட்டால் சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது.

கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, தானம் கிடைக்கும் கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டி.பி., ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.

தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம் செய்ய முடியாது.

கண்தானம் செய்ய விரும்புவோர் கண்தான வங்கி, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

ஆனால் கண் தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை.