சிறுநீரகம் பாதிப்புக்கான அறிகுறிகள் அறிவோமா...

சிறுநீரகத்தின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், சிறுநீரகம் சில காலம் இயல்பாக இயங்கும்.

ஆரம்ப கால பாதிப்புகள் உடனடியான அறிகுறிகளை காட்டுவதில்லை. சிறுநீரகம் பாதி அளவு பாதிப்புக்கு பின்பே ரத்தத்தில், கிரியாட்டினின் அதிகமாகிறது.

ரத்த பரிசோதனையின்போது, சிறுநீரக பாதிப்புக்கான சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சிறு பாதிப்பும், நோய்க்கான அறிகுறி தான்.

'நெப்ரான்' எனப்படும் ரத்தத்தில் நச்சு பொருட்களை பிரிக்கும் நுண்ணிய திசுக்கள், 80 சதவீதம் பாதிப்படைந்த பின்பே அறிகுறிகள் தெரியும்.

சோர்வு, பசியின்மை, கால்வீக்கம், மூச்சு திணறல், குமட்டல், வாந்தி, சிறுநீர் அளவிலும் நிறத்திலும் மாற்றங்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்.

துவக்கத்திலேயே பாதிப்புகளை கண்டறிந்து பாதுகாப்பை தொடங்கினால், 'டயாலிசிஸ்' வரை செல்வதை தடுக்கலாம்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய நோய்கள்.