பலாக்காய் பிரியாணி செய்யலாமா?
தேவையானப் பொருட்கள்: பலாக்காய் - 500 கிராம், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா 3, தக்காளி - 2, பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தலா 2 டீஸ்பூன்.
தயிர் - 0.5 கப், புதினா, கொத்தமல்லி - தலா 1 கப், மிளகாய் துாள், தனியா துாள், கரம் மசாலா - தலா 1 ஸ்பூன், மஞ்சள் துாள் - 0.25 டீஸ்பூன், லவங்கம், ஏலக்காய் - தலா 4, பிரியாணி இலை - 2.
பாஸ்மதி அரிசி - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், பட்டை - 2 துண்டு, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையானளவு.
பலாக்காயை தோல் நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில், 10 நிமிடம் வேக வைத்து, நீரை வடிகட்டி, காய்களை தனியே வைக்கவும்.
அரிசியை நன்றாக கழுவி, 30 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய், நெய் ஊற்றி சூடானவுடன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலையை போடவும்.
பின், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் போட்டு, பொன்னிறமானவுடன், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி, புதினா இலைகளை போட்டு வதக்கவும்.
வேக வைத்த பலாக்காய் துண்டுகள், மிளகாய்துாள், மஞ்சள் துாள், தனியா துாள், பிரியாணி மசாலா, கரம் மசாலா, தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிடவும்.
அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை போட்டு, நன்கு கிளறி, குக்கரை மூடவும்.
25 முதல், 30 நிமிடம் வேக வைத்தால், இப்போது சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி. பலாக்காய் பிஞ்சாக இருந்தால், சுவை அள்ளும்.