இதுதான் மாம்பழ அல்வா !
தேவையானப் பொருட்கள்: பழுத்த மாம்பழ விழுது - 1 கப், சோளமாவு - கால் கப், சர்க்கரை - அரை கப், தண்ணீர் - அரை கப்.
நெய் - 4 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன், முந்திரி, பாதாம் - கால் கப்.
ஒரு பாத்திரத்தில் சோளமாவை போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து, மாம்பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
மாம்பழத்தில் இனிப்பு குறைவாக இருந்தால், சர்க்கரையை கூடுதலாக சேர்க்கலாம்.
அடிப்பகுதி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றி, சூடானதும் மாம்பழ கலவையை ஊற்றி, மிதமான தணலில் வைத்து, கை படாமல் கிளறவும்.
கலவை கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். வாணலியில் ஒட்டாமல், சுருண்டு வரும் போது வறுத்த ஏலக்காய், முந்திரி, பாதாமை சேர்த்து கிளறி, அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, அல்வாவை ஊற்றி சமப்படுத்தி, ஆறியவுடன் விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.