உணவே மருந்து... வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ டிப்ஸ்!

கரிசலாங்கண்ணிக் கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும். இரவு வேளையில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது

ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும்

தொண்டை வலி, கரகரப்புக்கு அதிமதுரத் துாள் ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் போட்டு, பொறுக்கும் சூட்டில், சிறிது சிறிதாக குடிக்க, தொண்டை பிரச்னை நீங்கும். வாய்ப்புண் இருந்தாலும் சரியாகும்

கசகசாவை நைசாக அரைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பூசினால், குழந்தை அழுகையை நிறுத்தி விடும். வயிறு குளிர்ச்சியாகும்.

பேன் நீங்க: முதலில் இஞ்சியை அரைத்து வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து வைத்தால், தெளிந்து விடும்.

பின் தெளிந்த நீரை முடியின் வேர் காலில் படும்படி பூசி, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க, பொடுகு, பேன் மற்றும் அரிப்பு போகும்

கஸ்துாரி மஞ்சளையும், கோரைக் கிழங்கையும் கலந்து பொடி செய்து, தொடர்ந்து பூசிக் குளித்து வர, பெண்களுக்கு உதட்டின் மேல் உள்ள முடி போய் விடும்.