பாட்டி வைத்தியமாக செய்யக்கூடிய எளிய மருத்துவ டிப்ஸ்!
தொண்டையில், 'டான்சில்' பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க முடியாமல் குளிர்ச்சியான பொருட்களை உண்ண நேரிட்டால் அதித வலி உண்டாகும்.
அப்படி வலிக்கும் போது, உடனே சூடான நீரில் சிறிது உப்பு போட்டு நான்கைந்து முறை கொப்பளித்தால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது
எருக்கன் இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு, ஆறியதும், கால்களை அதில் வைத்து கொண்டிருந்தால், குதிகால் வலி போய்விடும்.
கை, கால் வீக்கத்திற்கு, ஒரு தேக்கரண்டி கடுகு எடுத்து, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து, அதை நன்கு சுட வைக்கவும்.
பொறுக்கும் சூட்டில், வலி உள்ள இடத்தில், பற்று மாதிரி இட்டுக் கொண்டால், வீக்கம் குறைந்து, வலி நீங்கும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி போட்டு கொள்ளலாம்.
இலுப்பை எண்ணெயில், மஞ்சள் துாள் கலந்து கால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
தலைவலிக்கு புதினா இலைகளை அரைத்து நெற்றியில் பற்றாகப் போடலாம்.
முளைகட்டிய பயறு, காய்ந்த திராட்சை, வெல்லம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர, உடலில் இரும்புச் சத்து அதிகரித்து, ரத்த சோகை குணமாகும்.
வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு மறையும்.
சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.