உடல் பருமன் குறைக்க உதவும் வாட்டர் ஒர்க் அவுட்!
உடல் பருமனை குறைக்க 'அக்வா ஏரோபிக்ஸ்' பயிற்சி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் அதிக கலோரி எரிக்கமுடியும். இப்பயிற்சியை எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
நீச்சல் குளத்தில் நீந்தாமல், நீருக்குள் இசையுடன் உடலை இயக்கும் இந்த பயிற்சி, அனைவருக்கும் புதிய பிட்னஸ் தேர்வாக மாறி வருகிறது.
நீருக்குள் இசையுடன் செய்யப்படும் இந்த உடற்பயிற்சி, வெளிநாடுகளில் பிரபலம்.
அக்வா ஏரோபிக்ஸ் என்பது, நீரில் நின்றபடி அல்லது நகர்ந்தபடி செய்யப்படும் கார்டியோ மற்றும் உடல் தசை பயிற்சிகளின் கலவை.
நீரின் எதிர்ப்பு சக்தி காரணமாக சாதாரண நடைப்பயிற்சியைவிட, அதிக கலோரி எரிகிறது என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.