மாணவர்களை முன்னேற்றும் சமூகத் திறன்!

வீட்டில் தனிமையில் ஒரு சில முகங்களை மட்டுமே பார்த்து பழகியிருந்த குழந்தைகளுக்கு, புது நபர்களுடன், சக மாணவர்களுடன் எப்படி பழகுவது என்பது தெரியாது.

விட்டுக் கொடுத்தல், பகிர்தல், தொந்தரவு செய்யாமல் இருத்தல் போன்றவை அடிப்படை சமூகத் திறன்கள்.

பள்ளியில் மாணவர்களுக்கான சமூக திறன்களை வளர்ப்பது அவர்களை பள்ளிகளில் நல்ல மாணவர்களாகவும், சமூகத்தில் அரோக்கியமான மனிதர்களாகவும் பிற்காலத்தில் உருவாக்கும்.

குழந்தைகளை மற்றவர்களுடன் திறம்பட பழகவும், உறவுகளை உருவாக்கவும், குழுக்களாக வேலை செய்யவும், பிரச்னைகளைத் தீர்க்கவும், சுயமரியாதையை வளர்க்கவும் சமூக திறன்கள் உதவுகின்றன.

இந்த திறன்களை குழந்தைகளுக்கு பள்ளியிலேயே கற்பிப்பது அவர்களின் கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகும்.

குழந்தைகளுக்கு சமூகத் திறன் குறைபாடு இருந்தால் மற்றவர்களிடம் உதவி கேட்க சஞ்கோஜப்பட நேரிடலாம். அப்போது சந்தேகங்கள் தெளிவு பெறாமல் இருந்துவிடும்.

சமூகத் திறன் நேர்மறையான கற்றலுக்கு வழிவகுக்கிறது. ஒருவரின் சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.

ஒரு குழுவில் பணிபுரியும் அல்லது படிக்கும் மாணவர்கள் வெவ்வேறு நபர்களுடன் தொடர்புகொள்ளும் போது அது ஒரு ஆரோக்கியமான நட்புக்கு வழிவகுக்கிறது.

சக குழுக்கள், சமூகம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நல்ல உறவு உருவாகும் பொழுது தன்னம்பிக்கைப் பிறக்கிறது.

ஆசிரியர்கள் உணர்வுகளைப் பற்றிப் பேசப் பேச, குழந்தைகள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்பாகிறது. புத்தகங்கள் படிக்கையில், படங்கள் பார்க்கையில், விளையாடும் போது, சமூக உறவை பற்றி விளக்க வேண்டும்.