இந்த சீசனில் சுவைக்க வேண்டிய இந்திய மாம்பழங்கள் சில
மாம்பழம் என்றாலே பலருக்கு பிடித்தமானது அல்போன்சா ரகமே. இது பரவலாக கிடைக்கக்கூடியது.
அதேவேளையில் இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் உள்ளன. அப்படி, தனித்துவமான சுவைகளுடன் கூடிய சில ரகங்கள் இதோ...
இமாம் பசந்த்... இது ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தில் பயிரடப்படுகிறது. அரச மாம்பழம் எனவும் அழைக்கப்படுகிறது. வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும்.
குலாப் காஸ்... பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் விளையும் இந்த
ரகம், இனிய நறுமணம், இளஞ்சிவப்பு நிற தோலுடன் கூடியது. அதிக இனிப்பு
இல்லாததால், கொளுத்தும் வெயிலில் தோலுடன் அப்படியே சாப்பிட புத்துணர்ச்சி
கிடக்கும்.
கிளிமூக்கு தோதாபுரி... தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விளைகிறது. இந்த மாம்பழ வகையில் முனைகள், கிளியின் மூக்கை போன்று இருப்பதால் தோதாபுரி என அழைக்கப்படுகிறது.
மாம்பழம் என்றாலே மல்கோவா தான் சட்டென்று நினைவுக்கு வரும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அதிகளவில் கிடைக்கும்.
லட்சுமண போக்... மேற்கு வங்கத்தில் மால்டா பகுதியில் அதிகம் விளைகிறது. அதிக இனிப்பும், அதிக புளிப்பும் இல்லாமல் சீரான சுவையுடன் உள்ளது.
லங்ரா... உத்திரபிரதேசம், வாரணாசியை பூர்வீகமாக கொண்ட இந்த மாம்பழம் வட
இந்தியாவில் பிரபலம். பழுத்த பிறகும் தோல் பச்சையாகவே இருக்கும். உள்ளே சதை
மென்மையாக, சாறு நிறைந்திருக்கும்.
மாம்பழங்களின் ராணி கேசர்... சவுராஷ்டிரா, குஜராத்தின் கட்ச் பகுதிகளில் விளைகிறது. இதன் தனித்துவமே நறுமணம் தான். குங்குமப்பூ நிறத்தில் இதன் தோல் இருப்பதால் கேசர் என்று பெயர்.