சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கும் மாற்று உணவுகள் சில!
புரதம், கால்சியம், தாமிரம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
இதற்காக, ஆரோக்கியமான உணவுகளை தேடித்தேடி உட்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஓரே வகையான உணவுகளை சாப்பிடும்போது சலிப்படைவர்.
குறிப்பிட்ட உணவுகளில் மட்டுமே சத்துகள் நிறைந்துள்ளதாகவும் கணிப்பர். எனவே, சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கும் மாற்று உணவுப் பொருட்கள் சில இதோ...
1 கப் நிறைய பசலைக்கீரையில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பதாக பலரும் நினைக்கலாம்.
ஆனால், ஒரே ஒரு முட்டையிலும் அதேயளவு இரும்புச்சத்து உள்ளது. குறிப்பாக, வேக வைத்த முட்டையை உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு உகந்தது.
4 ஆரஞ்சுப் பழங்களில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளதாக பலரும் நினைப்பர்.
ஆனால், ஒரே ஒரு நெல்லிக்காயிலேயே அதேயளவு வைட்டமின் சி உள்ளது, குறிப்பாக 10ல் 1 பங்கு கலோரி அளவிலேயே கிடைக்கிறது.
5 கப் பருப்பிலுள்ள புரதச்சத்தை, ஒரு மீடியம் சைஸ் சிக்கன் இறைச்சியில் பெறலாம்.
1 கப் வால்நட்டில் கிடைக்கும் ஒமேகா 3 சத்து, 1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதைகளில் கிடைக்கக்கூடும். குறிப்பாக, 4ல் 1 பங்கு கலோரி அளவிலேயே கிடைக்கிறது.