தகிக்கும் வெயிலுக்கு தமிழகத்தில் கூலான பட்ஜெட் பிரண்ட்லி மலைவாசஸ்தலங்கள் சில !

திண்டுக்கல் அருகேயுள்ள பன்றிமலை இதமான வானிலை, நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்குகளுடன் கூடிய அழகிய வியூ பாயின்ட்களுக்காக மினி கொடைக்கானல் என அழைக்கப்படுகிறது. .

திருநெல்வேலியில் மணிமுத்தாறுக்கு அருகிலுள்ள மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. வழியெங்கும் அடர்ந்த மரங்கள், தேயிலைத் தோட்டங்களை ரசித்துக் கொண்டே செல்லலாம்.

ஊட்டிக்கு அருகிலுள்ள கோத்தகிரி பழமையான மலை வாசஸ்தலமாகும். தேயிலை தோட்டங்கள், தொட்டபெட்டா மலைத்தொடர், மூடுபனி மூடிய மலைகள், பள்ளத்தாக்குகள் என கவர்கிறது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை, நண்பர்களுடன் லாங் ரைடு செல்ல பைக் பிரியர்களின் சாய்ஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேயிலை தோட்டமாக இருந்தாலும், அழகிய வெண் மேகங்கள், வளைந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் என இயற்கை ஆர்வலர்களை வெகுவாக ஈர்க்கிறது மேகமலை.

ஊட்டியிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள மசினக்குடி, இயற்கைப் பிரியர்களின் பேவரிட் ஆக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாசுபடாத இடங்களில் இது ஒன்றாகும்.

கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ள கொல்லிமலை, இயற்கை அழகும், ஆன்மிகமும் இணைந்துள்ள சுற்றுலாத்தலம்.