பெயரை மாற்றி கொண்ட சில நாடுகள்!
துருக்கியே... மத்திய கிழக்கில் உள்ள துருக்கி, கடந்த 2022ல் தனது பெயரை துருக்கியே (Turkiye) என மாற்றி கொண்டது.
மியான்மர்... நம் அண்டை நாடான மியான்மர் கடந்த 2019ல் பர்மா (Burma) என்ற தனது பெயரை 'மியான்மர்' என மாற்றி கொண்டது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த பெயரை அங்கீகரிக்கவில்லை.
செசியா... செக் குடியரசு (Czech Republic) என அழைக்கப்பட்ட நாடு, 2016ல் தனது பெயரை செசியா என மாற்றி கொண்டது.
ஸ்ரீலங்கா... சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட நம் அண்டை நாடான இலங்கை, 1972ம் ஆண்டில் தனது பெயரை ஸ்ரீலங்கா என மாற்றி கொண்டது.
ஜோர்டான்... டிரான்ஸ்ஜோர்டன் (Transjordan) என அழைக்கப்பட்ட நாடு, 1949ம் ஆண்டு தனது பெயரை ஜோர்டான் என மாற்றி கொண்டது
தாய்லாந்து... சியாம் (Siam) என்றழைக்கப்பட்ட நாடு 1939ம் ஆண்டு தனது பெயரை தாய்லாந்து என மாற்றி கொண்டது.
ஈரான்... பெர்ஷியா (Persia) என அழைக்கப்பட்ட நாடு, 1935ம் ஆண்டு தனது பெயரை ஈரான் என மாற்றி கொண்டது.