கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும் உணவுகள் சில...!
கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்பு, ஃபோலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள், கூந்தல் சேதம், முன் கூடிய நரை போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
கூந்தல் உதிர்வு, பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயம் தீர்வாக உள்ளது; கூந்தல் வேர்கால்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இது முக்கியப்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான பச்சைக் கீரைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வெள்ளரிக்காய், எள் மற்றும் முட்டை போன்றவை கூந்தலின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
பாதாம் மற்றும் பிற உலர்பருப்புகள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன.
நிலக்கடலையிலுள்ள வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துகள் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.