டிசம்பரில் பட்ஜெட்டுக்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

லடாக்... குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இளசுகளின் பேவரைட் பட்டியலில் ஒன்றாக உள்ளது.

கொடைக்கானல், தமிழகம்... கோடை காலத்துடன் ஒப்பிடும்போது, இந்த டிசம்பரில் இங்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கக்கூடும். பட்ஜெட் செலவுக்குள் விசிட் அடிக்கலாம்.

சிரபுஞ்சி, மேகாலயா... பருவமழையை ரசிப்பதற்கான அழகிய ஹாட்ஸ்பாட்; குளிர்காலத்தில் குறைவாகவே பார்வையாளர்கள் வருவர். பகலில் வெப்பம் குறைவாக இருப்பினும், தெளிவான வானிலை நிலவக்கூடும்.

ஜிரோ, அருணாச்சல பிரதேசம்... அழகிய நிலப்பரப்பு மற்றும் பழங்குடியினரின் கலாசாரத்துக்காக அறியப்பட்ட இந்த ஆஃப்பீட் இடம், பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

பூண்டி, ராஜஸ்தான்... டிசம்பரில் ஜெய்ப்பூர் அல்லது உதய்பூர் போன்ற கூட்டமான இடத்துடன் ஒப்பிடும்போது, அரண்மனைகள், படிக்கட்டு கிண்றுகள் என அமைதியான அழகுடன் ரசிக்க வைக்கிறது.

கந்திகோட்டா, ஆந்திரபிரதேசம்... டிசம்பரில் இங்கு குறைவான பார்வையாளர்களே வரும் நிலையில், இது ஒரு சிறந்த ஆஃப் சீசன் இடமாக உள்ளது.

மகாபலிபுரம், தமிழகம்... பழங்கால பாறையில் குடையப்பட்ட கோவில்கள், சிற்பங்களுக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் அமைதியான கலாசார அனுபவத்தை அளிக்கிறது.