நாவல்பழத்தின் வியக்க வைக்கும் பலன்கள்

நாவல் பழத்தை அளவாக சாப்பிடும்போது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். பெருந்தமனி தடிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பை குறைக்கிறது.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, பிற ஆக்ஸிஜனேற்றங்கள் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.

இதன் கிளைசெமிக் பண்புகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. நாவல் பழ விதைகள் பொடியாக்கி சுடுதண்ணீரில் கலந்து குடித்து வர நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. குறைந்த கலோரிகளே உள்ளதால் கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சி இதிலுள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, இளமையான தோற்றத்தை தருகிறது.

நாவல் பழத்துடன் சிறிதளவு உப்புச்சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் இதை தவிர்க்கலாம்.