மன அழுத்தத்தின் அறிகுறி என்னென்ன?

துாக்கமின்மை, படபடப்பு, எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு அதிகமாக மனச்சோர்வு, மன அழுத்தம் உருவாகிறது.

இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். எந்த வேலையை செய்தாலும் கடினமானதாக உணர்வார்கள்.

இவர்களில் ஒரு சிலருக்கு பசி அதிகமாக இருக்கும், ஒரு சிலருக்கு பசியே எடுக்காது.

டிவி பார்ப்பது, பாடல் கேட்பது புத்தகம் படிப்பது போன்றவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

யாரிடமும் அதிகமாக பேசாமல் அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களை தனிமையில் விடக்கூடாது. மன அழுத்தம் அதிகமானால் தற்கொலை எண்ணங்கள் கூட வரக்கூடும்.

சிலருக்கு மன அழுத்தத்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரதய நோய், அல்சர் உள்ளிட்ட உடல் பாதிப்பு வரக்கூட வாய்ப்பு உள்ளது. இவற்றை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மனநல டாக்டரை அணுக வேண்டும்.