தமிழக வெற்றி கழகம்... கட்சி துவங்கிய நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் நலத்திட்டம் மற்றும் நிவாரன உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும், வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என அறிக்கை விட்டுள்ளார் விஜய்.

தொடர்ந்து, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மற்றொரு திரைப்படத்தையும் முடித்துவிட்டு, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எக்ஸ் தளத்திலும் 'டிவிகே விஜய்' என கணக்கை துவக்கியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பலரும் அவரின் அக்கவுண்டை பாலோ செய்யத் துவங்கியுள்ளனர்.