ஈஸியா செய்யலாம் டேஸ்டியான மஷ்ரூம் கிரேவி!
முதலில் ஒரு பாக்கெட் மஷ்ரூமை, சுத்தமாக கழுவி தேவையான அளவில் நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அடுப்பில் வைத்து, தேவையானளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய 1 வெங்காயம் மற்றும் 4 பச்சை மிளகாயை போடவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
நறுக்கிய 2 தக்காளி, 6 முந்திரிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இந்த மசாலா ஆறிய பின், மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அரைத்த மசாலாவை போட்டு, தேவையானளவு மஞ்சள் துாள், மிளகாய் துாள், தனியா துாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது, நறுக்கி வைத்த மஷ்ரூம்களை சேர்த்து கிளறி, 5 நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்கவும்.
இது கெட்டியானதும், கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லியை துாவி, 2 நிமிடங்கள் கொதிக்க வைத்தால், சுவையான மஷ்ரூம் கிரேவி இப்போது ரெடி.
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிட சுவை அள்ளும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.