தூங்கும் நேரம்... இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
தினமும் போதிய நேரம் துாங்குவது அவசியமானது.
பொதுவாக ஒரு நாளைக்கு 7 - 8 மணி நேரம் துாங்கவது ஆரோக்கியம் தரும் என்பது நிபுணர்களின் அட்வைஸாகும்.
இந்நிலையில் உலகில் 20 நாடுகளில் தூங்குவது குறித்து 50 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் நாட்டின் சராசரி துாங்கும் நேர அளவில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. இங்கு சராசரி துாக்கம் 7 மணி, 52 நிமிடமாக உள்ளது.
இப்பட்டியலில் நெதர்லாந்து (7 மணி, 45 நிமிடம்), பெல்ஜியம்
(7 மணி, 41 நிமிடம்), நியூசிலாந்து (7 மணி, 40 நிமிடம்), பிரிட்டன் (7 மணி,
33 நிமிடம்) அடுத்தடுத்த இடங்களிலுள்ளது.
இதில் 10வது இடத்தில் இந்தியா (7 மணி, 14 நிமிடம்) உள்ளது.