இல்லங்களில் நவராத்திரி கொலு வைக்க டிப்ஸ், டிப்ஸ்!
நவராத்திரி கொலுவில் வைக்க, நாமே கலசம் செய்யலாம். வருடா வருடம் வித விதமாக, நம் கற்பனை திறனுக்கு ஏற்ப அலங்காரம் செய்யலாம்
கொலு படிக்கட்டுகளில், ஓரிழை கோலம் போட வேண்டும். ஒன்பது நாட்களும் கொலு நல்லபடியாக தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, 'லக்ஷ்மி கல்யாணம்' பாடி ஆரம்பிப்பது நல்லது
சுண்டல் போட்டுக் கொடுக்க, காய்ந்த இலை தொன்னைகளை உபயோகப்படுத்தலாம்
உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை அழைத்து, கொலுவில் கச்சேரி செய்யச் சொல்லலாம்
நவராத்திரி ஆரம்பித்து முடியும் வரை, கொலுவில் விதவிதமான கோல டிசைன்களையும், கோலம் போட தேவையான பொருட்களையும் முன்பே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அரிசி மாக்கோலம், கோல மாவு கோலம், ரங்கோலி, பூக்கோலம், ஜவ்வரிசி கோலம், கலர் உப்பு கோலம், இன்ஸ்டன்ட் ரங்கோலி, நீர் மேல் கோலம், நீரின் அடியில் கோலம் மற்றும் நவதானிய கோலம் போடலாம்.
மொத்தமாக ஒரே ஆண்டில் நிறைய பொம்மைகளை வாங்காமல், அந்தந்த, 'ட்ரெண்டு'க்கு ஏற்ற மாதிரி ஒவ்வோர் ஆண்டும் வாங்கி கொலு வைக்கலாம்
கொலுவுக்கு வருகிறவர்களுக்கு கொடுக்கப் போகும் பரிசாக, வீட்டிலேயே சின்னச் சின்ன, 'கிராப்ட் ஒர்க்'காக செய்து கொடுக்கலாம் அல்லது முன்கூட்டியே மொத்தமாக வாங்கி வைக்கவும்
கொலுவை பார்க்க வரும் கன்னிப் பெண்களுக்கு மருதாணி, வளையல் மற்றும் பொட்டு சேர்த்து தாம்பூலம் கொடுக்கலாம்.