மழைக்காலத்தில் சமையலறை பராமரிப்பு டிப்ஸ்!!

சமையலறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும். எதிரெதிரிலோ, பக்கவாட்டுகளிலோ ஜன்னல்கள் இருந்தால், தினமும் சிறிது நேரமாவது அவற்றை திறந்து வையுங்கள்

முடிந்தவரை சமையலறை ஈரமில்லாமல் இருக்கட்டும். மேடை நன்கு சுத்தம் செய்யப்பட்ட நிலையிலிருப்பது நல்லது. உணவுப் பொருட்களை மூடியே வைக்கவும்.

மழை காலத்தில், சமையலறையில் ஒருவித துர்நாற்றம் ஏற்படும். நாப்தலின் உருண்டைகளை சமையலறை அலமாரிகளின் கீழ் பகுதியில் போட்டு வைத்தால், துர்நாற்றம் வராது.

பருப்புகளை நன்கு உலர வையுங்கள். பின், அவற்றை காற்றுப் புகாத ஜாடிகள் அல்லது டப்பாக்களில் வையுங்கள். அப்போதுதான் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை அவற்றில் பரவாமல் இருக்கும்

சில துளிகள் விளக்கெண்ணெயை, பருப்புகள் அடங்கிய பெட்டிக்குள் தடவி வைத்தால், பூச்சிகள் அண்டாது

பூச்சிகளை தவிர்க்க தரைப்பகுதியில் துளைகள் இருந்தால், அவற்றை சிமென்ட்டால் அடைத்து விடுவது நல்லது. தேவைப்படும் போது அவற்றின் மீது கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கலாம்.