நீங்கள் வாங்கும் மீன்கள் தரமானதா? நல்லதை வாங்க டிப்ஸ்!!

மீன் சாப்பிட ஆசைப்படும் பலருக்கும் அதன் தரம் கண்டறிவதே முக்கிய பிரச்னை.கடையில் விற்பனை செய்வது நல்ல மீன் தானா, கெட்டுப்போனதா என்பதை அறிய முடியாமல் தவிப்பர் .

'இ.என்.டி.,' சோதனை செய்தால் போதும். அதாவது கண்களால் அறிதல் (இ), முகர்ந்து அறிதல் (என்), தொட்டு அறிதல் (டி) என்பதே இ.என்.டி., சோதனையின் அடிப்படை. அது குறித்துப் பார்ப்போம்.

கடைக்குச் சென்றதும், மீன்களை பார்வையிட வேண்டும். மீன் பளபளப்பாக இருக்க வேண்டும். கண்கள் பளீரென இருக்க வேண்டும்.

செதில்கள் சேதம் அடையாமல், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோல் இருக்க வேண்டும். செவுள்கள் சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

பின் மீனை முகர்ந்து பாருங்கள். புதிய மீன், நாற்றம் அடிக்காது. புதிய மீனில், சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் இருக்கும். ஆனால், கெட்டுப்போன மீனில் நாற்றம் இருக்கும்.

தரமான புதிய மீன் விரலில் தொட்டால் வழுக்கும், ஈரமாகவும் இருக்கும். உறுதியாக, தொட்டால் ரப்பர் போல் இருக்கும். மீன் உடலில் லேசாக தொட்டு அழுத்தினால் குழி ஆகக்கூடாது.

கெட்டுப்போன மீன், லேசாக தொட்டு அழுத்தினாலும் உடல் ஒடுங்கி குழி போல் ஆகி விடும். நிறைவாக இச்சோதனையில் தேறாத மீன்கள் கெட்டுப்போனவை என்று அர்த்தம். அவற்றை வாங்கக் கூடாது.