இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாளைக் குறிக்கும் வீரதீர தினத்தை, முன்னிட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது அளப்பரிய பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம்.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில், 1897 ஜன.23ல் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். இவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்.
குறிப்பாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். அவரின் பிறந்தநாளில் அவர் கூறிய சில பொன் மொழிகள் இதோ.
சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும்.
போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும்