உலக முதலுதவி தினம் இன்று!

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை கொண்டு அவசர நிலை பராமரிப்பை மேற்கொள்வதே முதல் உதவி.

விபத்தில் காயமடைபவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி வழங்கினால், அவர்களின் மரணத்தை தடுக்கலாம்.

இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உலக செஞ்சிலுவை சங்கம் சார்பில் செப்., 2வது சனி (செப். 12) உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

எதிர்பாராத விபத்துக்கு பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு சுயநினைவு உள்ளதா என பார்க்க வேண்டும்.

மூச்சுவிடுகிறாரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவரிடம் பேச வேண்டும்; கை, கால்கள் அசைகிறதா என்றும் பார்த்து, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

குறிப்பாக, பாதிப்புக்கு ஏற்றவாறு முதலுதவி எப்படி செய்ய வேண்டுமென மக்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.