உக்ரைன்... சூரியகாந்தி பூக்களின் நிலம் இது!

'சூரியகாந்தி' தாவரத்தின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இங்கிருந்து ஐரோப்பா, உலகளவில் பரவின.

உலகில் 'சூரியகாந்தி' உற்பத்தியில் ஐரோப்பிய நாடான உக்ரைன் முன்னணியில் உள்ளது.

இதனால் 'சூரியகாந்தி பூக்களின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

சூரியகாந்தி செடியின் உயரம் 10 அடி. இதன் இலை அகலமாக இருக்கும். இதன் பூ தனியாக இல்லாமல், ஒரு பூங்கொத்து போல இருக்கும்.

சூரியன் திசை நோக்கி திரும்புவதே இதன் தனிச்சிறப்பு.

இதன் விதைகள் உணவாகவும் பயன்படுகிறது.

மேலும், இதிலிருந்து சமையலுக்கான சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.