வாலன்டைன் டே வாரம்...பிப்.,7 முதல் ஆரம்பம்! எந்த நாள் என்ன கொண்டாட்டம்!!

பிப்., 7 - ரோஸ் டே : இத்தினத்தில் விருப்பமானவர்களுக்கு ரோஜா கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். காதலுக்கு சிவப்பு ரோஜா, நட்பிற்கு மஞ்சள் ரோஜா, சமாதானம் செய்ய வெள்ளை ரோஜா கொடுக்கலாம்.

பிப்., 8 - ப்ரப்போஸ் டே: நமக்கு பிடித்தவர்களுக்கு மனதிற்குள் உள்ள காதலை, அன்பையும் வெளிக்காட்டும் நாள்.

பிப்., 9 - சாக்லேட் டே : இந்த நாளில் நமக்கு பிடித்தவர்களுக்கு சாக்லேட்டை பரிசாக கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.

பிப்., 10 - டெடி டே : டெடி பியர் பொம்மையைப் பிடித்தவர்களுக்குப் இத்தினத்தில் பரிசளித்து காதலை சொல்லலாம்.

பிப்., 11 - பிராமிஸ் டே : காதலில் ஒருவருக்கொருவர் உறுதிமொழி செய்து மிகவும் அவசியம். இந்த நாளில் காதலோடு பிரியாமல் இருப்போம் என்று உறுதிமொழி செய்கிறார்கள்

பிப்., 12 - ஹக் டே : அன்பை பரிமாற கட்டிப் பிடித்தல் ஒரு அழகான வெளிப்பாடாகும். இந்த நாளில் காதலர்களை மட்டுமல்ல நண்பர்களை, குடும்ப உறுப்பினர்கள் ஹக் செய்து அன்பை பரிமாறலாம்.

பிப்., 13 - காதல் மொழியில் முத்தத்திற்கு முக்கிய இடமுண்டு. இந்த தினத்தில், உங்கள் அன்பானவர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பை காட்டலாம்.

பிப்., 14 - வாலன்டைன்ஸ் டே : நிறைவாக வந்தது காதலர் தினம். அன்பை வெளிப்படுத்தும் நாள். ரோமில் காதலர்களை சேர்த்து வைத்த வாலன்டைனை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.