கோடை வெயிலை சமாளிக்க என்னென்ன சாப்பிடலாம்?
காலை உணவில் கம்பஞ்சோறு, கேழ்வரகு கூழ், சோளச்சோறு, இவற்றுடன் தயிர் மோர் சேர்த்து, சின்ன வெங்காயத்துடன் சாப்பிடலாம்.
தினசரி ஒரு வேளை பழைய சோறு, நீராகாரம், சிறிது தேங்காய் பூ துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து, நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாய் என ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம்.
சுண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் மற்றும் மோர் மிளகாய் வற்றல் போன்றவற்றையும் சைடு டிஷ் ஆக சாப்பிடலாம்.
இது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உகந்த கோடைகால உணவாகும்.
சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், வெண்பூசணி சாறு, பன்னீர் திராட்சை, இளநீர், நுங்கு, பச்சநாடன் வாழைப்பழம் போன்றவற்றை தாராளமாக உட்கொள்ளலாம்.
சாப்பிடாமல் பட்டினி விரதம் இருக்கக் கூடாது.
ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. இது உடல்சூட்டை அதிகப்படுத்தி மலக்கட்டு பிரச்னையை உண்டாக்கும்.
அதிக காரம், அதிக புளிப்பு, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. இதனால், பித்தம் கூடி உடற்சூடு அதிகரிக்கும்.