அடிக்கடி கண்களில் எரிச்சல், கண்ணீர் வடிய என்ன காரணம்?

மே முதல் செப்டம்பர் வரை காலநிலை மாற்றத்தில் வெயில், வறண்ட காற்று அதிகம் காணப்படும்.

வெயிலில் நேரடியாக கண்கள் படும்போது கண்களில் எரிச்சல், வறட்சி இவற்றின் தொடர்ச்சியால் தொற்று போன்றவை அதிகம் ஏற்படுகிறது.

இதனால் வெயிலில் அலையும் போது ஒருசிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாவதுடன், கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும்.

நேரடியாக கண்களை கசக்குவதோ, தண்ணீரால் கழுவுவது, எண்ணெய் விடுவது இதற்கு தீர்வாகாது.

பாதிப்பு தொடர்வதால் தகுந்த கண் மருத்துவரை நாடி பரிசோதனையின் மூலம் தீர்வு காண வேண்டும்.

இதன்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீண்ட நேரம் நேரடியாக வெயிலில் நிற்பதை தவிர்ப்பதுடன், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும், கண் பாதுகாப்பு சாதனங்கள், தலைக்கு தொப்பி அணிவது, பொது இடங்களில் பாதுகாப்புடன் சுகாதாரத்தை மேற்கொள்வது என தொடரலாம்.