டைப் 2 நீரிழிவு அதிகரிக்க காரணம் என்ன?

நீரிழிவு பாதிப்புக்கு வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே காரணம்.

துாக்கமின்மை, மன அழுத்தம், இரவு, பகல் மாறி மாறி வேலை செய்வது, உடற்பருமன், தவறான உணவு பழக்கம் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இதுதவிர, கணையம் இன்சுலின் சுரந்தாலும், உடல் செல்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஆகியவற்றால், டைப் 2 பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் 13 கோடி பேர், முன் நீரிழிவு நிலையில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

இவர்கள் வாழ்வியல் முறையை மாற்றாவிட்டால், எப்போது வேண்டுமானால், நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாவர்.

நீரிழிவு இருந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த குழாய் அளவில் மாற்றம், உடல் பருமன் உள்ளிட்டவை வரும்; உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும்.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். மாரடைப்பு வந்தாலும், அறிகுறிகளை வெளிப்படுத்தாமலே இறப்பு நேரிடும்.

ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்வது குறைவதால் தான், பலருக்கும் காலில் எரிச்சல், ஊசி குத்துவது போல வலித்தல், உணர்ச்சியில்லாத நிலை ஏற்படுகிறது.

இந்தியாவில் எட்டு நிமிடத்திற்கு ஒருவருக்கு கால் இழப்பு, கால் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.