அடிக்கடி டீ குடிப்பதால் என்ன ஆகும்...?
டீ குடிப்பதால் நோய் எதிர்ச்சக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளையில், ஒரு நாளுக்கு 710 மில்லிக்கு மேல் குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றன.
தேயிலைகளில் இயற்கையாகவே கேஃபின் உள்ளது. டீ மூலம் அதனை அதிகம் எடுப்பது கவலை, மன அழுத்தம் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வை உண்டாக்கக்கூடும்.
டீ அதிக அளவில் அல்லது வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அதில் உள்ள சில கலவைகள் குமட்டலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டீயில் உள்ள கேஃபின், தூக்கத்துக்கு தேவையான மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியை பாதிப்பதால், தூக்கமின்மை, சோர்வு, மறதி, கவன குறைபாடு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
ஆசிட் ரீப்ளக்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு டீயின் கேஃபின் அதனை அதிகரித்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.
டீ அல்லது வேறு வகையில் கேஃபினை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அதனை சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தும்; தவிர்க்கும்போது தலைவலி, எரிச்சல், சோர்வு, இதயத்துடிப்பு அதிகத்தல் ஏற்படக்கூடும்.