எப்போது நீரிழிவுக்கான மாத்திரையை நிறுத்தலாம்?
நீரிழிவு பாதிப்பு என்பது நோயல்ல. நம் உடலில் இன்சுலின் சுரக்காததால் ஏற்படும் ஒரு குறைபாடு. இது குழந்தைகளுக்கு கூட வரும்.
மரபு அணுக்கள், வேலைப்பளு, மன அழுத்தம், உடல் பருமன், சரியான துாக்கம் இன்மை, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது ஆகிய காரணங்களால் டைப் 2 சர்க்கரை குறைபாடு ஏற்படுகிறது.
நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் உணவு, உறக்கும், உடற்பயிற்சியை முறைப்படுத்திக் கொண்டால், சர்க்கரை குறைபாட்டில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.
சர்க்கரை அளவு தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், மாத்திரையை நிறுத்திக்கொள்ளலாம்.
மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு எல்லாம் சாப்பிடலாமா? என்றால் அது சாத்தியமில்லை. அதன் விளைவு எதிர் மறையாக இருக்கும்.
சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கும் போதுதான், இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
குறைந்து, நார்மலாகி விட்டால் ஊசி தேவையில்லை. இன்சுலின் ஊசியால் எந்த பின் விளைவும் ஏற்பட்டதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பழங்களில் மா, பலா, வாழை, அன்னாசி, திராட்சை, சப்போட்டா இந்த ஆறு பழங்களும் சர்க்கரையை கூட்டும். அதனால் அவற்றை தவிர்க்கலாம்.
மாத்திரை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறைத்து அளவாக வைத்துக்கொண்டால், மாத்திரை நிறுத்தி விட்டு, அதே நிலையை தொடரலாம்.
இந்த நடைமுறையில் மாற்றம் இருந்தால் மாத்திரையை நிறுத்த முடியாது.தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டால், கிட்னி பாதிக்காது எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.