ஹெபடைடிஸ் பிரிவுகளும் காரணங்களும் அறிவோமா !

ஹெபடைடிஸ் என்பது கல்லீரலின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ வைரஸ்கள் தாக்குவதல் ஏற்படும்.

கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சருக்கான பிரதான காரணிகளில் ஒன்றான ஹெபடைடிஸ் வைரஸ், சமீப காலங்களில் புதிய வடிவங்களில் உலா வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

இவற்றாலும், மது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஆட்டோ இம்யூன் கோளாறுகள், வளர்சிதை மாற்ற நிலைமைகளாலும் ஏற்படலாம்.

ஹெபடைடிஸ் ஏ, இ வகை தொற்று மாசுபட்ட உணவு, நீர் மூலம் பரவும் குறுகிய கால தொற்றுகள்.

அதே நேரத்தில் பி, சி வகைகள் நீண்ட கால தொற்றுகளாக எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே கல்லீரலை சேதப்படுத்தி விடும்.

தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், பைப்ரோஸிஸ் -கல்லீரலில் வடு, சிரோசிஸ் நிரந்தர வடு, கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சருக்கு வழிவகுக்கும்.

தற்போது ஹெபடைடிஸ் ஏ, பி பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் உள்ளன. நல்ல பலன்களை அளிக்கும் சிகிச்சைகள் இருக்கின்றன.

ஹெபடைடிஸ் பி கண்டறிவதற்கான குவான்டிடேடிவ் ஹெபிஎஸ்எஜி மற்றும் ஹெச்பிவி மரபணு சோதனை, ஹெபடைடிஸ் சி- நோய்க்கான ஹெச்சிவி ஆர்என்எ பிசிஆர் போன்ற புதிய சோதனைகள் உள்ளன

மரபணு சோதனை, மருந்தியல் மரபணு விபரக் குறிப்புகள் மூலம் சரியான வைரஸ் தடுப்பு மருந்துகளை தேர்ந்தெடுக்க முடியும். மேலும், பக்க விளைவுகள் இருக்குமா என்பதை கணிக்கவும் உதவும்.