ரெட் அலர்ட் என்றால் என்ன?

மழை பெய்யும் அளவு அடிப்படையில் வானிலை மையம் ஒவ்வொரு நிறம் அடிப்படையில் எச்சரிக்கை செய்யும்.

‛ரெட் அலர்ட்' என்பது 24 மணிநேரத்தில் 204.5 மில்லி மீட்டர் மழையை விட அதிகம் பெய்யும்.

இதன்படி, 1 செ.மீ., மேல் - லேசான மழை2 முதல் 6 செ.மீ., வரை - மிதமான மழை

7 முதல் 11 செ.மீ., வரை - கனமழை ( மஞ்சள் அலர்ட்)12 முதல் 20 செ.மீ., வரை - மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்)

21 செ.மீ.,க்கு மேல் - அதிகனமழை (ரெட் அலர்ட்). குறிப்பாக ‛ரெட் அலர்ட்' விடுக்கப்படும்போது ஏறக்குறைய 20 சென்டிமீட்டரை விட அதிகளவில் மழை பெய்யும்.

அதுமட்டுமின்றி அனைத்து வகையான போக்குவரத்து, மின்சப்ளை பாதிக்கப்படும்.

சில சமயம் மக்களின் உயிருக்கும் ஆபத்தும் ஏற்படலாம். அதி கனமழை பெய்யலாம் என்பதால் இந்த சமயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.