பிசிஓடி, பிசிஓஎஸ் என்ன வேறுபாடு?

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் பிசிஓஎஸ் என்று சொல்லப்படும் கருக்குழாயில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்னை, 10 பெண் களில், மூன்று பேருக்கு உள்ளது.

இந்த மூவரில், ஒருவர் உடல் பருமனுடனும், ஒருவர் ஒல்லியாகவும், ஒருவர் சரியான உடல் எடையுடனும் இருக்கிறார். 16 - 21 வயது வரை உள்ள பெண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.

இது தவிர, சில பெண்கள், இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்யும் போது, கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருக்கும். பரிசோதித்தால், பிசிஓஎஸ் இருப்பது தெரிய வரும்.

மாதம் ஒரு கருமுட்டை உருவாகி, முதிர்ந்து, உடைந்து வெளிவருவது இயல்பானது.

இதற்கு பதிலாக, முதிர்ச்சியடையாத, பாதி முதிர்ந்த நிலையில் பல கரு முட்டைகள், ஒரு கருக்குழாயிலோ, இரு கருக்குழாயிலுமோ உருவாவது பிசிஓடி.

இதனால், சீரற்ற மாதவிடாய், பல மாதங்கள் மாதவிடாயே வராமல் போவது இருக்கும்.

இந்த பாதிப்பினால், மனநிலையில் மாறுபாடு, கணையம் சுரக்கும் இன்சுலின் முழுமையாக வேலை செய்யாதது, உடல் பருமன், ஹார்மோன் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுகிறது.

இது போல பல கோளாறுகளின் தொகுப்பை பிசிஓஎஸ் என அழைக்கப்படுகிறது.