வெற்றிக்கு என்ன வழி? பாரதியாரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்
நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
நடந்ததை எண்ணி வருந்தாதே. நடக்கப் போவதை நினைத்து மயங்காதே. உன்னை நீயே திருத்திக் கொண்டு உண்மையின் பாதையில் செல்.
உழைத்து வாழ்வதில்தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.
அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அதுவே உலக இயக்கத்தின் ஆதாரம்.
பயம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. எனவே பயத்தை கைவிடு. தைரியமாக செயல்படு.
தர்மத்தின் பாதையில் நீ சென்றால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.
உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு துணிவுடன் முன்னேறு.
நம்பிக்கை இருக்குமிடத்தைத் தேடி வெற்றி வரும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் அடையாளம்.
எதிரிகள் நமக்கு வெளியுலகத்தில் இல்லை. பயம், சந்தேகம், சோம்பல், கோபம் போன்ற பண்புகள் நமக்குள் எதிரிகளாக இருக்கின்றன.