சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் தொண்டை வலிக்கு தீர்வு என்ன?

தற்போது மழை, வெயில் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

குளிர்ச்சியான பானங்களை அருந்துவது, தண்ணீரை காய்ச்சாமல் குடிப்பது, ஒவ்வாமை பிரச்னையால் தொண்டை வலி ஏற்படலாம்.

தொண்டை வலி, சளி, வறட்டு இருமல் தொடர் உடல் சோர்வு இருந்தால் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும்.

தற்காலிக தொண்டை வலிக்கு காலை, மாலையில் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

காய்கறி சூப், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இது கட்டுப்படுத்தப்படும்.

இஞ்சி சாறு, துளசி சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவில் கலந்து குடிக்கலாம்.

ஒரு தேக்கரண்டி அதிமதுரத் தூளை வாயில் போட்டு, மிதமான சூட்டில் வெந்நீர் குடித்தால் தொண்டை வலி மற்றும் கரகரப்பு உடனே நீங்கும்.

பசும்பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டை தொற்று குணமாகும்.

வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு மென்று சுவைத்தால் தொண்டை கரகரப்பு மாறும்.

ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வலி தொடரும் பட்சத்தில் டாக்டரை அணுகி பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.