முதுகெலும்பில் தாங்க முடியாத வலிக்கு தீர்வு என்ன?

முதுகு தண்டுவடப்பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் காரணமாக வலி ஏற்படும்.

அதே போல் விபத்துக்களால் ஏற்படும் வலி, முதுகுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் 'டிஸ்க் பல்ஜ்' வலி ஏற்படும்.

ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பணி செய்பவர்கள், சுமை துாக்குபவர்கள், இருசக்கர வாகனங்களில் அதிகமாக பயணம் செய்பவர்கள் இது போன்ற வலியால் அவதிப்படும் நிலை ஏற்படும்.

வலி ஏற்படும் போது உடனடியாக மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும். பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சையளிக்கப்படும்.

சிறியளவில் எலும்பு முறிவு என்றால் இடுப்பில் பெல்ட் அணிவது, மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தலாம். பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கலாம்.

தீவிர பாதிப்பு இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்.

தண்டுவடத்தில் காச நோய் கிருமி தொற்றுகளாலும் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிய மாத்திரைகளை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.