பிரசவத்திற்கு பிறகு பால் போதவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பிறந்தவுடன் சீம்பால், சொட்டு சொட்டாக தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என சிலர் நினைப்பர்.
குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்க ஆரம்பிக்கும். இது தான் இயற்கை.
சர்க்கரை நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்கள், தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும்.
சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
காய்கறி, முட்டை, பால், பழங்கள் அதிகமாகவும் இனிப்பு, கிழங்கு, எண்ணெய் பதார்த்தங்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும்.
உப்பைக்குறைத்து, புரோட்டின் அதிகம் எடுப்பதும் அவசியம். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும்.
மிக அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.