வாட்ஸ் அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை.!

நிகழ்விடத்தை துல்லியமாக தெரிவித்து, '108' ஆம்புலன்ஸ் சேவையை பெறும் வகையில், 94450 30725 என்ற 'வாட்ஸாப்' எண்ணை தமிழ்நாடு சுகாதார திட்டம் துவக்கியுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின், 108 ஆம்புலன்ஸ் சேவையில், 1,353 வாகனங்கள் உள்ளன.

94450 30725 என்ற வாட்ஸாப் எண் வாயிலாக, ஆம்புலன்ஸ் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும்.

இந்த எண்ணுக்கு, 'HI' என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதும், 'புக் ஆம்புலன்ஸ்' என்ற, 'லிங்க்' வரும்.

அதன் வாயிலாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை பெறுவதுடன், தங்களின் நிகழ்விடத்தையும் துல்லியமாக, ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு தெரிவிக்க முடியும்.

இந்த புதிய வசதியால் உடனுக்குடன் ஆம்புலன்ஸ் வருவதை உறுதி செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவக்கூடும்.

மேலும் இந்தச் சேவை மூலம் ஆம்புலன்ஸ், வாகனத்தின் எண் மற்றும் வரும் நேரம் ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

அதேவேளையில் விபத்துக்கள் அல்லது அவசர காலங்களில், சரியான இடத்திற்கு விரைவாக ஆம்புலன்ஸ் வரும்.